கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை இருக்கும் நிலையில் 100-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த மாணவனுக்கு அதே பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் சேர்ந்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக அந்த 11ஆம் வகுப்பு மாணவன் தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவர்களில் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில் தற்போது தலைமறைவான மற்றொரு மாணவனையும் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது