கர்நாடக மாநிலத்தில் 4 அரசு பேருந்து போக்குவரத்து கழகங்கள் உள்ளது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் அரசு பேருந்து ஊழியர்களுக்கு சம்பளம் சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில் சம்பளம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லை. இது பற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி காலை 6 மணியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
