பாட்னா மாவட்டத்திலுள்ள பாராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தன் மிஸ்ரா என்ற கைதி, அடையாளம் தெரியாத நால்வரால் நேரடியாக ICU அறைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலை 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் முழுப் பயங்கர காட்சிகள் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. சம்பவத்தை அடுத்து சந்தன் மிஸ்ரா சிக்கலான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Shocker from Patna, Bihar:
CCTV footage shows 4 armed men storming an ICU ward at Paras Hospital and murdering a patient. What’s happening? pic.twitter.com/Iv77fYd21d— Asawari Jindal (@AsawariJindal15) July 17, 2025
சந்தன் மிஸ்ரா, பிகுசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர்மீது ஏற்கனவே பல கொலை வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த நாட்களில் பரோலில் வெளியில் வந்த அவர், மருத்துவ தேவைக்காக பாட்னாவின் பாராஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நேரத்திலேயே எதிரி கும்பல் உறுப்பினர்கள் 5 பேர் தீவிரமாக திட்டமிட்டு அவரை கொலைசெய்ய வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இது ஒருவரது பாதுகாப்பு என்ற அடிப்படையே கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் அரசின் பாதுகாப்பு மீதான கவலைகளை எழுப்பியுள்ளது. அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “மருத்துவமனையில் உள்ள ICU வில்கூட பாதுகாப்பின்றி துப்பாக்கிச் சூடு நடக்கின்ற நிலை இது. பீஹாரில் யாரும் பாதுகாப்பாக இல்லை என இது சொல்லுகிறது” என்றார்.
இதனையடுத்து, சந்தன் ஷேறு கும்பலுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தொடர்ந்து நடக்கும் கொலை சம்பவங்கள் அரசு மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
