இன்றைய கால பள்ளிக் குழந்தைகள் பலரும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனை தடுப்பதற்காக தொடர்ந்து சிபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பள்ளி மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்ற கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தினம் தோறும் எந்த அளவிற்கு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்ற “சுகர் போர்டுகள்” வைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
அந்த போர்டுகளை பள்ளி வளாகத்திலும், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களான ஹால், உணவகம் போன்ற இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டது. அதேபோன்று தற்போது சிபிஎஸ்இ மீண்டும் ஒரு ஆரோக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அதில் அதிக எண்ணெய் பொருள்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், உடல் பருமன் போன்ற தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு போர்டுகளை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளியில் மாணவர்கள் கூடும் இடங்களில் “ஆயில் போர்டுகள்” வைக்க சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
