ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் பால்டால் பகுதியில் பெய்த கனமழையால் அமர்நாத் யாத்திரை இன்று வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் அப்பகுதியில் பெரும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் யாத்திரைப் பாதையில் சிக்கிய இரண்டு பக்தர்கள் சேற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.
Heavy Mud sliding near Railpathri in Baltal during ongoing Amarnath Yatra.
Amarnath Yatra suspended for a day from Pahalgam and Baltal Due To Continous Heavy Rainfall#JammuKashmir #Shrinagar #landslide #AmarnathYatra2025 #Baltal pic.twitter.com/1OaaW90oLZ
— Ravi Pandey🇮🇳 (@ravipandey2643) July 17, 2025
அதிர்ஷ்டவசமாக, அந்த இருவரும் அருகிலிருந்த யாத்ரீகர்களால் உடனடியாக மீட்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அவசரநிலையை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் எல்லை சாலை அமைப்புப் பிரிவினர் (BRO) இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
பால்டால் பாதையில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரயில்பத்ரி பகுதியில் பலத்த மண்சரிவு ஏற்பட்டு அச்சமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பக்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
