கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்ட நபர் பண மோசடி வழக்கில் உங்களை கைது செய்ய வாரண்ட் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் வழக்கில் உங்களை டிஜிட்டல் கைது செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து தப்பிக்க குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு பணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதை நம்பிய குமார் யாருக்கும் தெரியாமல் மர்ம நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூபாய் 11 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். ஆனாலும் அந்த மர்ம நபர் குமாரை தொடர்ந்து மிரட்டி உள்ளார். இதனால் விரத்தியடைந்த குமார் நேற்று தனது கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தன்னுடைய தற்கொலைக்கு டிஜிட்டல் கைதே காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
