திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 8ம் தேதி அன்று வீட்டில் இருந்த 72 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது மகன் பாலசுந்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அந்த சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒரு பெண் அல்லது திருநங்கை அல்லது பெண் வேடமிட்ட நபர் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு பணிக்காக வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிதம்பரபுரத்தை சேர்ந்த வீரவேலனின் மகன் விஜய் என்பவர் தனக்கு இருக்கும் கடன் பிரச்சினையை சரி செய்ய நகைகளை திருட பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர் கைது செய்து, மூதாட்டி இடம் இருந்து பறிக்கப்பட்ட நகைகளை மீட்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது.