‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும், ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசன் மகளாகவும், ‘ஜில்லா’வில் விஜய்யின் தங்கையாகவும் திகழ்ந்த நிவேதா தாமஸ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் ஏற்பட்ட சில உடல்நலக் குறைபாடுகளால் அவரது உடல் எடை கணிசமாக அதிகரித்தது. இதனால் சமூக வலைதளங்களில் அவர் மீது உருவக் கேலிகள், விமர்சனங்கள் பெருமளவில் கிளம்பின. ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல், “இவை என்னை பாதிக்காது. எனது பயணத்தில் தொடர்ந்து இறங்கப்போறேன்” என நிவேதா தாமஸ் உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘35’ என்ற திரைப்படத்தில் அவர் மிக சிறப்பாக நடித்ததற்காக, பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தற்போது, புதிய கதைகள் கேட்டு வருவதோடு, தன் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு மீண்டும் தன்னம்பிக்கையுடன் திரும்பியுள்ள நிவேதா தாமஸின் புதிய லுக்கை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.