தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 4 வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியானது தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளனம் சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவளித்துள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 3 ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருபாலரும் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் 20 நாடுகளில் இருந்து 150 வீரர்,வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தற்போது நடைபெறும் இந்த போட்டியானது அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுக்கு தகுதி சுற்றாகும். இதில் இந்திய அணியில் இருந்து 12 வீரர் வீராங்கனைகள் இடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே 8 பேர் தகுதியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, “இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு 3.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஷ்ரா மற்றும் இந்திய அலைச்சறுக்கு சம்மேளன தலைவர் அருண் வாசு ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.