நெல்லை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பேசினார். இதில், தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தொடர்பாக முக்கியமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

“தவெக கட்சி உருவாக்கம் பாஜக யோசனையின் ஓர் அங்கம்” என்றார் மேலும் விஜய் தலைமையில் கட்சி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இது சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்க பாஜக திட்டமிட்ட இயக்கம் என அவர் தெரிவித்தார்.அத்துடன், விஜயின் வீட்டில் கடந்த காலத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையை நினைவுபடுத்திய அப்பாவு, “அந்த சோதனையை நடத்தியவருக்கும் அதை ‘சரி செய்தவருக்கும்’ தவெக-வில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.“இதற்கு தான் பாஜகவின் மறைமுக ஆதரவுடன் விஜய் களமிறக்கப்பட்டிருக்கிறார்” என்றார் சபாநாயகர் அப்பாவு.

இது தொடர்பான அவரது கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.