மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது சரக்கு லாரி ஒன்று திடீரென்று எதிர்பாராத விதமாக விமானம் மீது மோதியது.
இதில் விமானத்தின் வலதுபுற இருக்கையில் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் பயணிகளுக்கோ, விமான பணியாளர்களுக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதாவது ஆகாசா ஏர் விமான நிலைய நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் இருந்த சரக்குகள் இறக்கப்பட்டது. அந்தப் பணியில் இந்த சரக்கு லாரி ஈடுபட்டு இருந்தது. அப்போது அதன் ஓட்டுனர் விமானத்தின் இருக்கையின் உயரம் பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் செயல்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
