தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே கடையில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (25) என்ற பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணும் வாலிபரை காதலித்த நிலையில் இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது அதனை மீறி ஒரு கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதோடு பின்னர் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களுடன் அங்கு ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் மேனகாவும் அவருடைய கணவரும் ஒரு கோவிலில் நடைபெறும் விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு சென்று விட்ட நிலையில் சுபலட்சுமி மற்றும் மணிகண்டன் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது மணிகண்டன் கடையிலிருந்து சிக்கன் வாங்கி வந்து தன் மனைவியிடம் சாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவி தன் அக்கா கோவிலுக்கு சென்றுள்ளதால் வீட்டில் வைத்து சிக்கன் சாப்பிட மறுத்துள்ளார்.
இதனால் கோபத்தில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
