உத்தர பிரதேசம் மாநிலம் ரசூல்பூர் அவுரங்காபாத் கிராமத்தை சேர்ந்தவர் இஷ்ரத் கான்(26). இவர் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேசத்தின் முதல் மந்திரி யோகி ஆத்யநாத் இருவரை குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அந்த நபர் மோடி மற்றும் முதல் மந்திரி இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எனவே சவுகான் என்ற நபர் இஷ்ரத் கான் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று இஷ்ரத் கான் -ஐ கைது செய்தனர். இதனைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.