பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்ட ஒழுங்கை கையாள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்த சில தலைவர்களும் கூட சமீபத்திய கொலை சம்பவங்கள் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரியும் லோக் ஜன்சக்தி கட்சி தலைவர் ஆன சிராக் பஸ்வான், வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் நாட்டின் வளர்ச்சிக்காக போட்டிடப் போவதாக கூறினார்.

தற்போது சிராக் பஸ்வானின் அந்த அறிவிப்பு பீகாரில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிராக் பஸ்வானுக்கு எதிராக பல கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் பட்,  இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் நேரடியாக  விடுத்துள்ளார் என பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த சமூக வலைதளப் பயனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் லோக் ஜன சக்தி கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.