அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இது உலக வர்த்தக சந்தையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் எடுத்த இந்த முடிவு, அமெரிக்கா-பிரேசில் இடையிலான வர்த்தக உறவுகளை முற்றிலும் பாதிக்கக்கூடிய நிலைக்கு தள்ளியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரேசில் அரசு வர்த்தக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தாலும், பேச்சுவார்த்தை நடக்காத சூழ்நிலையில் அதே அளவிலான பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரேசிலின் அதிபர் லூயிஸ் இன்சியோ லுலா டா சில்வா கூறியதாவது: “முதலில் அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்வோம். ஆனால் பேச்சுவார்த்தை சாத்தியமாகவில்லை என்றால், அவர்கள் விதிக்கும் 50% வரிக்கு நாங்களும் அதே அளவிலான வரியை அமெரிக்கா மீது விதிப்போம். இது பரஸ்பர சட்டத்தின் அடிப்படையில் அமையும்” என தெரிவித்துள்ளார்.
இந்த பரஸ்பர வரி விதிப்பு போக்கு, இருநாடுகளின் வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கி இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
