மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஈரான்–இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 13ம் தேதி இருந்து தொடங்கிய போர் 12 நாட்கள் தொடர்ந்து நடந்தது.

இஸ்ரேல், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதன் பின்னர், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மையங்கள் மீது குண்டுவீச்சு விமானம் மூலம் தாக்குதல் மேற்கொண்டது. இதனால் ஈரான் கடும் அதிருப்தியடைந்த நிலையில், பதிலடி நடவடிக்கையாக முந்தைய மாதம் 23ம் தேதி கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளமான அல்-உதையத் தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதை  உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர், ஈரானின் ஏவுகணைகள் விமானப்படைத்தளத்தை தாக்கியதாக ஒப்புக்கொண்டார். இந்த தாக்குதலில் விமானப்படைத்தளத்தில் சொத்துகள் சேதம் அடைந்ததாகவும், அதிர்ச்சியான விஷயமாக, யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஏவுகணைகள் பலவும் வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்க்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள், உலக நாடுகளில் பெரும் கவலையையும் பாதுகாப்பு அச்சத்தையும் உருவாக்கியுள்ளன.