மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக செயல்படுகிறது. இதனை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான் பெரிய தவறு என்று எம்பி வைகோ வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதற்காக அதிமுக தீண்ட கூடாத கட்சி கிடையாது. எம்ஜிஆரையோ, ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தவில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். மதிமுக வின் தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ திமுகவில் சேர்க்கவில்லை. கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
