மத்திய அமெரிக்க நாடான கவுதமமாலாவில் அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் 3 முதல் 5.7 என்ற ரிக்டர் அளவுகளில் 150 முறைக்கு மேல் ஏற்பட்டது.

தொடர்ந்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்து இரவு அங்கே படுத்து தூங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்து சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பீதி அடைந்த பொதுமக்கள் சிலர் எஸ்குவாண்ட்லா என்ற பகுதிக்கு லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது லாரி சென்ற வழியில் பாறைகள் சரிந்து விழுந்து மேலும் 2 உயிரிழந்தனர். இந்த  நிலநடுக்கத்தால் அப்பகுதி முழுவதும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.