சீன நாட்டில் யாங் என்ற 64 வயது முதியவர் வசித்து வருகிறார். இவரது வயிற்றில் 52 வருடங்களாக ஒரு பல்துலக்கும் பிரஷ் இருந்தது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது யாங் தன்னுடைய 12-வது வயதில் தவறுதலாக பல் துலக்கும் பிரஷை விழுங்கியுள்ளார்.

இதை வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்ற பயத்தில் அவர் அதை மறைத்து விட்டதோடு காலப்போக்கில் அது தானாகவே வெளியே வந்து விடும் என நினைத்தார். ஆனால் அது அப்படியே 52 வருடங்களாக அவர் வயிற்றில் இருந்தது.

சமீபத்தில் இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் பிரஷ் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அவரது வயிற்றில் இருந்த 17 சென்டிமீட்டர் நீள பிரஷை அகற்றினர். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.