விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இங்கு அவருடைய தங்கை மகளான ஒரு 14 வயதில் சிறுமி வந்துள்ளார். அந்த சிறுமி சில வாரங்கள் தன்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் பின்னர் மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது தன்னுடைய பெரியம்மாவின் மூன்றாவது கணவர் பெருமாள் சாமி என்பவர் தன்னிடம் அத்துமீறியதாக கூறினார். இது தொடர்பாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து பெருமாள் சாமி மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.