இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் சர்க்கஸ் நடைபெறும் இடத்தை போல ஒரு கூடாரத்தின் உள்ளே இருவர் சாகசம் செய்கின்றனர். இதனை சுற்றி இருந்து பலர் வேடிக்கை பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த இருவர்களும் ஒரு, ஒரு முனையில் இருந்து கொண்டு சாகசம் செய்கிறார்கள்.

 

இதில் ஒருவர் கயிற்றை பிடித்துக் கொண்டு ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு தாவுகிறார். மற்றொரு புறத்தில் இருக்கும் ஒருவர் தலைகீழாக தொங்குகிறார். இந்நிலையில் ஒரு புறத்திலிருந்து மற்றொருபுறத்திற்கு தாவும் நபரை, தலைகீழாக நிற்பவர் தனது கைகளால் அவரது காலை பிடிக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட் கழன்று விடுகிறது. இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து வேகமாக இறங்கி உள்ளே ஓடுகிறார். இது தொடர்பான வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.