
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியின் பெற்றோர் அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல் நிலையத் துணை சூப்பிரென்ட் நவீன் மற்றும் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான விசாரணையில், அந்த 17 வயது மாணவி அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனிடையே அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி அந்த மாணவனை வீட்டிற்கு அழைத்து உள்ளார். அப்போது அந்த மாணவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.