நவதர்னா அரசு பொதுத்துறை நிறுவனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரம் போன்ற பல உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றி வருகிறது. கடந்த 2023-2024 நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனம் ரூ.12,387 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டுகளில் மலேசியா, சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் பல்வேறு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தற்போது, இந்த நிறுவனத்தில் கீழ்க்காணும் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

விவரங்கள் கீழ்வருமாறு:

பணியின் பெயர்: சீனியர் வொர்க்ஸ் இன்ஜினீயர் (Senior Works Engineer)

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ. 40,000

வயது வரம்பு: 01.04.2025  தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Electrical & Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation போன்ற துறைகளில் B.E/B. Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 3 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ircon.org இணையதளத்தில் வழங்கப்பட்ட விண்ணப்பத்தை A4 வெள்ளை காகிதத்தில் தட்டச்சு செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

தேவையான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் உறையில் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

அஞ்சல் முகவரி:
Joint General Manager, HRM, IRCON International Limited, C-4, District Centre, Saket, New Delhi – 110 017.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: மே 5, 2025

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்திற்காக www.ircon.org இணையதளத்தை பார்வையிடலாம்.