சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று இரவு தரமணி பகுதிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

வேளச்சேரி அருகே வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அவருடைய இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்த நிலையில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.