இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரில் கட்டப்பட்டு வந்த ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவானது.

இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1002 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 2,376 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் தாய்லாந்து மக்களுக்கு இந்தியா உதவ தயாராக இருக்கிறது என நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த வகையில் இரண்டு இந்திய விமான படை விமானங்கள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மியான்மர் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் -1800 309 3793 (இந்தியா), +91 8069009901( வெளிநாடு)
மின் அஞ்சல் – [email protected]