நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வரும் அதே வேளையில் இணையதள மோசடிகளும் அதிகரித்து வருகிறது. சில மோசடி செயலில் ஈடுபடுபவர்கள் பரிசுத்தொகை விழுந்துள்ளது, ஏடிஎம் கார்டு லாக் ஆகி உள்ளது எனக் கூறி குறுஞ்செய்திகள் அனுப்பி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஓய்வூதிய திட்டங்களான தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் பணம் பெரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாக ஓய்வு நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தற்போது எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது போலி வலைதளங்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதாகவும், PFRDAI ஆணையம் எஸ்எம்எஸ் அனுப்புவது போல் அனுப்பி சந்தாதாரர்களை ஏமாற்றி வருகின்றனர்.

இதனால் ஓய்வூதிய சந்தாதாரர்கள் மற்றும் பொதுமக்கள் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அனுப்பும் அனைத்து குறுஞ்செய்திகளிலும் PFRDAI என்ற ஐடி குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை சந்தாதாரர்கள் கவனமாக சரி பார்த்து விட்டு பதில்களை அனுப்ப வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.