
கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரமணன். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி அடிக்கடி டிவி பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது ரமணன் சிறுமியை மிரட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு நாள் ரமணன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை அவரது பாட்டி பார்த்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி சிறுமியின் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ரமணனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த போக்சோ நீதிமன்றம் ரமணனுக்கு 110 வருடம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.