இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்கள் என்பது நாளுக்கு நாள் மாறி வருகிறது. பலரும் வெவ்வேறு விதமான உணவுகளை விரும்புவதால் வித்தியாசமான முறையில் யோசனை செய்து சமைக்கிறார்கள். சமீபத்தில் கூட ரோஸ் பூவை காலிபிளவர் போன்று எண்ணெயில் போட்டு பொரித்து சீன நாட்டினர் அப்படியே சாப்பிட்ட வீடியோ வைரலானது. விதவிதமாக பஜ்ஜி சுடுவது கேள்விப்பட்டிருப்போம் அதேபோன்று விதவிதமாக ஆம்லெட் போடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.? அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகிறது.

அதாவது கொல்கத்தாவில் சாலையோர உணவகத்தில் ஒருவர் வித்தியாசமான முறையில் ஆம்லெட்  போட்டார். அதாவது அவர் ஆம்லெட்டில் கிரீம் பிஸ்கட்டை சேர்த்தார். அவர் முதலில் சூடான தோசை கல்லில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார். பின்னர் ஒரு பாக்கெட் முழுவதும் உள்ள கிரீம் பிஸ்கட்டை அதில் கொட்டினார். அந்த முட்டையுடன் பிஸ்கெட்டும் வெந்து நிறம் மாறியது. இதைத்தொடர்ந்து தனக்கு பிடித்த மாதிரி அதனை அலங்கரித்து வாடிக்கையாளர்களுக்கு அவர் சாப்பிட கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by shivam sharma (@chaska_food_ka)