இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. ஸ்மார்ட் போன் மூலமாக கூகுள் pay, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது மற்றும் ஷாப்பிங் செய்வது என அனைத்து விஷயங்களும் எளிதாகி விட்டது. UPI என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. UPI வந்த பிறகு பணத்தை கையில் எடுத்து செல்வது குறைந்துவிட்டது. ஏனென்றால் பெரும்பாலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாக செய்யப்படுகின்றன. நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டில் ஒன்பது மாதங்களில் சைபர் குற்றங்களால் 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 13,384 சைபர் குற்றங்களும் நடந்துள்ளது. கடந்த 11 வருடங்களில் மட்டும் இதனால் 73 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.