திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் போலீஸ் உயர் அதிகாரிகளே பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் குற்றங்கள் குறைவான அளவில் தான் நடந்தது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனை போன்றவைகள் அமோகமாக நடைபெறுகிறது.
இது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்த நிலையிலும் அவர் கண்டுகொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வினார். இதே போன்ற டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்ற தேர்தலில் மண்ணைக் கவ்வினார். இதிலிருந்தே அவர்களுடைய பலம் வெளிப்பட்டு விட்டது. இருவருமே மண் குதிரைகள். அவர்களை நம்பி செல்பவர்கள் கண்டிப்பாக ஆற்றில் தான் மூழ்கனும்.மேலும் கண்டிப்பாக அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று கூறினார்.
