பிரபல BTS பாடகர் ஜின்னை பொது இடத்தில் முத்தமிட்ட ஜப்பானை சேர்ந்த 50 வயதுடைய ரசிகைக்கு தென் கொரிய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு ராணுவ சேவையை முடித்துவிட்டு ஜின் திரும்பினார். இந்த நிலையில் ஜின் ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் 50 வயதுடைய ரசிகை பொது இடத்தில் வைத்து பிரபல பிடிஎஸ் பாடகர் ஜின்னை முத்தமிட்டுள்ளார். இது தொடர்பாக மற்றொரு ரசிகை கிரிமினல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.