தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் விடா முயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‌ இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அஜித் தற்போது கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற கார் ரேசில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா மாகாணத்தில் நடைபெறும் கார் ரேஸில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியின் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் 14-வது இடத்தை பிடித்த நிலையில் கிளப் டிவிஷன் முதல் ரேஸில் 14வது இடத்தை பிடித்து அரசத்தியுள்ளார். மேலும் நடிகர் அஜித்குமாருக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.