இயக்குநரும் நடிகருமான RJ பாலாஜி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம், இன்றுடன் தனது 100-வது நாளை நிறைவு செய்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், படத்தின் இயக்குநர் RJ பாலாஜி தனது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வெவ்வேறான நம்பிக்கைகள், வெவ்வேறான கலாச்சாரங்கள், வெவ்வேறான தலைமுறைகள் இருந்தாலும், ‘கருப்பு’ என்ற இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களில் மிகவும் ஆழமாகப் பதிந்து வாழ்ந்து வருகிறது. நன்றி கடவுளே, நன்றி மக்களே! இதைவிட ஒரு சிறந்த வரவேற்பையும் அங்கீகாரத்தையும் எங்கள் படைப்பிற்குப் பெற்றிருக்க முடியாது. இந்த அழகிய பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்… கருப்பா கூட வா!” என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களைக் கடந்தும் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் இந்த மெகா வெற்றி, படக்குழுவினரையும் RJ பாலாஜியின் ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
