பாகிஸ்தான் vs நியூசிலாந்து இடையிலான ICC Champions Trophy 2025 போட்டியின் போது, கருப்பு பூனை ஒன்று மைதானத்தில் நுழைந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில், நேதன் ஸ்மித் வீசிய 31வது ஓவரின் முடிவில், இந்த பூனை மைதானத்தில் நுழைந்தது. இதேபோன்று முந்தைய Tri-Nation Series இறுதிப் போட்டியின் போது, பாகிஸ்தான்-நியூசிலாந்து ஆட்டத்தையும் சில நிமிடங்கள் தடை செய்தது. அப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்த பூனை அதே பூனையா? அல்லது வேறு பூனையா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், இது தொடர்ந்து ICC போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தின்போது மைதானத்தில் தோன்றுவது ரசிகர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதைப் பார்த்து “கருப்பு பூனை தோன்றியது பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டமா? இல்லை தீய சகுனமா?” என்று சமூக ஊடகங்களில் கலாய்த்து வருகிறார்கள். பந்துவீச்சாளர்கள் மற்றும் நடுவரும் சில நிமிடங்கள் காத்திருந்து பின்னர் ஆட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.