இஸ்ரோ தலைவராக சோம்நாத் இருக்கிறார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது இஸ்ரோவின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த வி. நாராயணன் என்பவர் இஸ்ரோ புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவர் திருவனந்தபுரத்தில் உள்ள எல்பிஎஸ்சியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ புதிய தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் 2 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
