கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சிபுலால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சோனியா தனியார் பல் மருத்துவமனை கல்லூரியில் இணை பேராசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் சோனியா இரண்டாவது மாடியில் இருக்கும் படுக்கை அறையில் தூக்கில் சடலமாக தொங்கினார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவம் இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அதன் பிறகு சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சோனியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சோனியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். உண்மையான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
