சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பொன்னையா(78) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னையாவின் மனைவி இறந்து விட்டார்.
இந்த நிலையில் பொன்னையாவின் வீட்டில் வேலை பார்ப்பதற்காக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் வந்தார். அந்த பெண்ணுக்கு பொன்னையா பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பொன்னையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
