கேரள மாநிலத்தில் உள்ள கோண்டான் குளங்கரா பகுதியில் வாணி ரோமசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாணி கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் வாணி மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த வாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 15 மாதங்களாக வாணி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி வாணி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.