டெல்லியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களது 15 வயது மகள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் சிறுமி தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்தபோது 15 வயது சிறுமி யமுனை ஆற்றில் குதித்தது தெரியவந்தது. இதனை பார்த்த பிரேம்குமார் என்பவர் உடனடியாக சிறுமியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அதற்குள் போலீசாரும் அங்கு வந்தனர். இதனையடுத்து சிறுமிக்கு உரிய ஆலோசனை வழங்கி சிறுமையை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.