தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுகிறது. இதன் காரணமாக கியூ ஆர் கோடு முறையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. அதோடு மது பாட்டில்களை வாங்கிய பிறகு பில்லிங் நடைமுறையையும் கொண்டு வர இருக்கிறது. அதாவது மது பாட்டில்களை வாங்கிய பிறகு அவர்களுக்கு பில் போட்டு வழங்க வேண்டும். இதே போன்று  க்யூ ஆர் கோடு முறையிலும் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறை ஏற்கனவே பல மாவட்டங்களில் சோதனை முறையில் இருக்கும் நிலையில், ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் மதுபாட்டில்கள் வாங்கிய பிறகு பில் போட்டு வழக்கு முறையை அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அதன்படி ஜனவரி மாதம் முதல் அனைத்து மது கடைகளிலும் பில்லிங் மற்றும் க்யூ ஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.