ரஷ்யாவில் 2022 ஆம் ஆண்டு நடந்த விபத்து மற்றும் நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற காரணங்களால் அந்நாட்டு அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. உள்நாட்டு சந்தைகளுக்கு விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரை அரிசி ஏற்றுமதிக்கான தடை போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் ஆறு மாதங்களுக்கு அரிசி பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி 2025 ஆம் வருடம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அரிசி பொருட்கள் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.