திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அய்யனேரி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தாரூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தாமோதரன் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ தாமோதரனை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
