
மங்களூரில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் பலேபுனி கிராமத்தில் 70 வயது முதியவரால் 3 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியாழன் கிழமை அந்த 3 வயது சிறுமி கடையின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் போது கடையில் இருந்த 70 வயது முதியவர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்பப்படுத்தி உள்ளார்.
உடனே அந்த சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை தன் அம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தன் மகளுக்கு நடந்த சோகத்தை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார்கள் விசாரணை நடத்தி போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த 70 வயது முதியவர் அப்துல்லாவை கைது செய்துள்ளனர்.
மேலும் 3 வயது சிறுமிக்கு நடந்த இச்சம்பவத்தால் பெண் பிள்ளையை வைத்திருக்கும் அனைத்து பெற்றோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.