தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் கட்சியின் கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது. இந்த பாடலை நடிகர் விஜய் தன் சொந்த குரலில் பாடியுள்ளார். இதேபோன்று கொள்கை தலைவர்கள் மற்றும் கட்சியின் கொடிவிளக்க பாடல் போன்றவைகளை வெளியிடப்பட்டது.

இதில் கட்சியின் கொள்கை குறித்து வெளியிடப்பட்ட பாடலில் ஒரு தவறு செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழக என்ற வார்த்தைக்கு பதிலாக தழிழக என்று எழுதி உள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.