தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவருடைய முதல் மாநாடுகள் 27ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததோடு திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டார். திமுகவின் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழக வெற்றி கழகத்தில் கொள்கைகளோடு ஒத்துப் போகும் நிலையிலும் குடும்ப அரசியல் செய்யும் அந்த கட்சி திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவதாக ‌ ஒரே வார்த்தையில் திமுகவை அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் முதல் மாநாட்டினை நடத்தி முடித்த நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய பேச்சுக்கு ஆதரவு கொடுத்தும் விமர்சனங்களை தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோவில் முதியவர் ஒருவரிடம் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி அரசியலுக்கு வரும்போது விஜய் வரக்கூடாதா. மேலும் நான் கண்டிப்பாக விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன். மேலும் எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிட்டும் அவர் புகழ்ந்து பேசி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.