
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் நாளை கட்சி நிர்வாகிகளும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தகவல் விஜய் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் இடம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் புதிதாக பதிவு செய்த 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் கிழக்கு கடற்கரை சாலை பனையூர் முகவரியில் தமிழக வெற்றி கழகம் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.