ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த சனிக்கிழமை அதே பள்ளியில் படிக்கும் 8 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் மூவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி உடம்பில் ரத்த காயங்களுடன் நிர்வாணமாக வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற நிலையில் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
பின்னர் நடந்த விஷயங்களை சிறுமி தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் பள்ளியில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தின் முன்பாக போராட்டம் நடத்தியதோடு சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அபபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
