
தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் 16,500 அரசு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 4 நாட்கள் விடுமுறை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 வியாழன் கிழமை வருகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் ஒன்றாம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.