உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் அருகே உள்ள ரஸ்காவனில் இந்த கொடூரம் நடந்ததுள்ளது. இந்த மாணவனை பலிகொடுத்தால் பள்ளி பல வெற்றிகளை பெறும் மேலும் பள்ளி முன்னேறும் என்ற மூட நம்பிக்கையில் மந்திரம், தந்திரம் செய்யும் நோக்கத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலீஸ் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்த சிறுவனை ஹாஸ்டலில் இருந்து வரவழைத்து ஒரு குழாய் கிணறு அருகே நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர் ஆனால் சிறுவன் அழுது கூச்சலிட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுவனின் பெற்றோருக்கு; உங்கள் மகன் உடல்நிலை சரியில்லை என்று பள்ளியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே சென்று விசாரித்தபோது சிறுவனை நிர்வாகி காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். இறுதியில் சிறுவன் இறந்த நிலையில் உடல் காரில் இருந்து மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி இயக்குனர், அவரின் தந்தை மற்றும் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
