“கடைசி 4 நாள்ல தான் சார் மொத்தப் பிரசாரமுமே தலைகீழா மாறிடுச்சு, அதுவரைக்கும் எல்லாமே நமக்குச் சாதகமாத்தான் இருந்துச்சு!” என்று ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தேர்தல் கள ஆய்வுப் பணி குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் செய்தியாளர்களிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் திமுகவின் உண்மையான கள நிலவரம் என்ன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கத் தலைமை நிலையத்தால் எழிலரசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தனது விரிவான கள ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இளையர்களிடன் ஏற்பட்ட சமூகவலைத்தள தாக்கம் அப்படியே குடும்ப உறுப்பினர்களிடம் பரவி உள்ளது. பிரசாரத்தின் இறுதி நாட்கள் வரைக்கும் திமுகவிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான ஆதரவான சூழல் மட்டுமே நிலவி வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆனால், தேர்தலுக்கு முந்தைய கடைசி நான்கு நாட்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் கள நிலவரங்களில் ஏற்பட்ட திடீர் அதிரடி மாற்றங்கள் காரணமாகவே ஒட்டுமொத்த பிரசாரத்தின் திசையும், அரசியல் சூழலும் அப்படியே மாறியுள்ளதாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக எழிலரசன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேலும் வரும் நாட்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதாகவும் கூறினார்..
“கடைசி 4 நாட்களில்தான் பிரச்சாரம் மாறி இருக்கிறது; அதுவரை திமுகவிற்கு ஆதரவான சூழல்தான் இருந்தது”
ஈரோடு, நாமக்கல் மாவட்ட கள ஆய்வுக்கு நியமிக்கப்பட்ட எழிலரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளித்த பின் பேட்டி#DMK #Ezhilarasan #FiledReport #News18TamilNadu
▶️Watch… pic.twitter.com/jaEMXlH37l
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 15, 2026
“>
